நிலக்கோட்டை அருகே கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து தடுப்பு

வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென எரிவாயுவில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததுமின் இணைப்பை துண்டித்து கசிவு ஏற்பட்ட சிலிண்டரை சாக்கால் போர்த்தி வெளியே கொண்டு வந்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி பழைய போஸ்ட் ஆபீஸ் அருகே வசித்து வருபவர் முருகன். இன்று காலை இவரது மனைவி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சமையல் எரிவாயுவில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது.

உடனடியாக நிலக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

மின் இணைப்பை துண்டித்து கசிவு ஏற்பட்ட சிலிண்டரை சாக்கால் போர்த்தி வெளியே கொண்டு வந்தனர். மேலும் வீட்டில் இருந்த மற்ற சிலிண்டர்களையும் அப்புறப்படுத்தினர். இதனால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கியாஸ் சிலிண்டரில் சமையல் செய்யும் போது பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படும்படி அவர்கள் அறிவுரை வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com