செங்கோட்டை பகுதியில் பெருமாள் கோவிலில் கருடசேவை

சுந்தரராஜபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் வழிபாடு நடந்தது.
செங்கோட்டை பகுதியில்  பெருமாள் கோவிலில் கருடசேவை
Published on

செங்கோட்டை:

புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு நேற்று செங்கோட்டை அழகிய மனவாள பெருமாள் கோவில், அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவிலில்களில் கருட சேவை மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. செங்கோட்டை சுந்தரராஜபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, மாலையில் கொட்டும் மழையிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதைமுன்னிட்டு கோவிலின் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன.

இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலை அலங்காரம், தீபாராதனை பிரார்த்தனை, பஜனை நடைபெற்றது. பிரானுர் பார்டர்ஆஞ்சநேயர், செங்கோட்டை சிவன் கோவில், இலத்தூர் சனிஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com