வாய்க்காலில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்

கழிவுநீர் நெல் வயல்களில் புகுந்து விடுவதால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. சுகாதாரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாய்க்காலில் தேங்கி கிடக்கும் குப்பைகள்.
வாய்க்காலில் தேங்கி கிடக்கும் குப்பைகள்.
Published on

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலம் கிராமம் உள்ளது. முற்றிலும் நெல் விவசாயம் நடைபெறும் கிராமம் இது. இந்த கிராமத்தில் இருந்து வரகூர் செல்லும் தார் சாலையில் ஓரத்தில் விவசாய விளைநிலங்களுக்கு அருகில் உள்ள வாய்க்காலில் கழிவுநீர், குப்பைகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் நிறைந்து தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீர் அதன் அருகில் உள்ள நெல் வயல்களில் புகுந்து விடுவதால் நெல் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயி தெரிவிக்கின்றார்.

எனவே கண்டமங்கலம் கிராமத்தில் கழிவுநீர் தேங்கி கிடக்கும் வாய்க்காலை பார்வையிட்டு கழிவு நீரை அகற்றி சுகாதாரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com