திண்டுக்கல் அருகே புகையிலை விற்றவர்கள் கைது

தமிழகத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுதிண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்றவர்களை போலீசார் கைது செய்தனர்
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல் :

நிலக்கோட்டை அருகில் உள்ள திரவியம் நகரை சேர்ந்த பெருமாள் மகன் தென்னவராஜ்(24). இவர் நிலக்கோட்டையில் கஞ்சா வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை 15 நாள் சிறையில் அடைத்தனர்.

வத்தலக்குண்டு மயானசாலை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(55). இவர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே பெட்டிக்கடை வைத்துள்ளார். வத்தலக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா தலைமையிலான போலீசார் அவரது கடையில் சோதனை நடத்தினர்.

அப்போது குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்றது தெரியவந்தது. இதனைதொடர்ந்து செல்வராஜை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com