போடி அருகே கஞ்சா விற்ற 9 பேர் கைது

போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக போடி நகர் மற்றும் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடத்தல் கும்பலிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.
Published on

மேலசொக்கநாதபுரம்:

போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக போடி நகர் மற்றும் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்றனர். வேட்டவராயன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து அங்கு நின்றிருந்தவர்களிடம் ஒரு கும்பல் பேசி கொண்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் போடியை சேர்ந்த முத்துராசு, வினோத்குமார், மயிலாடும்பாறையை சேர்ந்த பாலமுருகன், ஜெகன், கலைவிநாயகர் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜோதி என்ற பெண்ணையும் ேபாலீசார் கைது செய்தனர்.

இதேபோல் போடி தாலுகா போலீசார் மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த ஈஸ்வரன், அஜித் பாண்டியன், சிலம்பரசன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த 2 கும்பலிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தனர். யாருக்கு விற்பனை செய்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வேறு எங்கும் கஞ்சாவை பதுக்கி வைத்துள்ளனரா என்பதை மோப்பநாய் கொண்டு தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com