நிலக்கோட்டை அருகே கஞ்சா கடத்திய 4 பேர் கைது

நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகனச் சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 4 பேரை கைது செய்து 8 ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட 4 பேரை படத்தில் காணலாம்.
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட 4 பேரை படத்தில் காணலாம்.
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து பிரிவில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகனச் சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது நிலக்கோட்டை குண்டலபட்டி பிரிவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான கார்த்திக்(34), அவரது மனைவி பாண்டி மீனா(32). மற்றும் அதேபகுதியைசேர்ந்த டீ மாஸ்டர் செண்பகராஜ்(34), கார்த்தியின் தங்கை சித்ராதேவி(31). ஆகிய 4 பேர்களும் 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அவரிகளிடம் சோதனை செய்து பார்த்தபோது 8 ½ கிலோ கஞ்சாவை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com