ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் பஸ் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் பஸ் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் விரட்டியதில் ஒருவர் பிடிபட்டார்.

அவர் கலைமோகன் (வயது25) என்பதும், கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய செல்வேந்திரன் என்பவரை தேடி வருகின்றனர்.

தென்கரை போலீசார் மயான பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த காமாட்சி (32) என்பவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com