ஆறுமுகநேரியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கும்பல் கைது-6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

சீட்டு விளையாடி கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். ரூ. 36 ஆயிரத்து 100 மற்றும் 6 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆறுமுகநேரியில் பணம் வைத்து சூதாடிய  8 பேர் கும்பல் கைது-6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி சீனந்தோப்பு பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக நேற்று மாலை ஆறுமுகநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சீட்டு விளையாட்டு

இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் மற்றும் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.

அங்கே சிலர் வட்டமாக அமர்ந்தபடி ' உள்ளே வெளியே' என்று கூறி பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

கைது

விசாரணையில் அவர்கள் தலைவன்வடலி முத்துலிங்கம் (45), பரமன் குறிச்சி சுயம்புலிங்கம் (44), காயாமொழி பால கிருஷ்ணன் (59), காயல்பட்டினத்தை சேர்ந்த சாமு சிராபுதீன்(50), செய்யது(50), தக்கியா சாகிப்(47),சுயம்புலிங்கம் (47), சாகுல் ஹமீது(60) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்கள் வைத்திருந்த சீட்டுக்கட்டு, ரூ.36 ஆயிரத்து 100 மற்றும் 6 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com