விநாயகர் சிலை ஊர்வலம்

கடந்த 22-ந் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.விநாயகர் சிலைகள் திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டது.
ஊர்வலத்தை பா. ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தொடங்கினார்.
ஊர்வலத்தை பா. ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தொடங்கினார்.
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் கடந்த 22-ந் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

நிகழ்வில் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார்.

பேட்டை சிவா, கோட்டூர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி, மடப்புரம், ரொக்க குத்தகை, அண்ணாநகர், பாரதியார் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டது.

ஊர்வலத்தை பா. ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தொடங்கி வைத்தார்.

விழா ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் விக்னேஷ், மாதவன், பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் சிவகுமார், மாவட்ட செயலாளர் வினோத், நகர தலைவர் அய்யப்பன், ஒன்றிய தலைவர் பூபதி, முன்னாள் மாவட்ட செயலாளர் இளசுமணி, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

முடிவில் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஜெயபால் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com