கோவில்பட்டி புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை

பவுர்ணமி சிறப்பு பூஜையையொட்டி வள்ளி, தேவசேனா, சமேத கல்யாண முருகனுக்கு அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. விழாவில் 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.
திருவிளக்கு பூஜை நடைபெற்றபோது எடுத்த படம்.
திருவிளக்கு பூஜை நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மாள் புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி காலையில் கணபதி பூஜையுடன் தொடங்கி கோடி சக்தி விநாயகர், வள்ளி, தேவசேனா, சமேத கல்யாண முருகன் சுவாமி- அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 7மணிக்கு 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் சுப்பிரமணிய அய்யர் செய்தார். ஏற்பாடுகளை வீரவாஞ்சிநகர் திருவிளக்கு பூஜை குழுவினர் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு, சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com