கடையம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பழச்செடிகளின் தொகுப்பு வழங்கல்

விவசாயிகளுக்கு 5 வகையான பழச்செடிகளின் தொகுப்பு 75 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தோட்டக்கலை துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
கடையம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பழச்செடிகளின் தொகுப்பு வழங்கல்
Published on

ஆழ்வார்குறிச்சி:

கடையம் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மா, நெல்லி,எலுமிச்சை, சீதாப்பழம், மாதுளை போன்ற 5வகையான பழச்செடிகளின் தொகுப்பு 75 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி துப்பாக்குடி பகுதியில் விவசாயிகளுக்கு பழச் செடிகளின் தொகுப்பு வழங்கப்பட்டது. தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் செண்பகவல்லி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியின்போது தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார். இதில் தோட்டக்கலை அறிவியல் விஞ்ஞானி இளவரசன், துப்பாக்குடி கிராம நிர்வாக அலுவலர் இசக்கிமுத்து மற்றும் முன்னோடி விவசாயிகளான ஏழுமலை, உலகநாதன், முத்துக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஞானசேகரன், தோட்டக்கலை அலுவலர் ஷபா பாத்திமா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கோவிந்தராஜன், திருமலைகுமார், பார்த்தீபன், பானுமதி ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com