நன்செய் இடையார் மாரியம்மன் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 7 கோபுர கலசங்கள் அனுப்பி வைப்பு

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 7 கோபுர கலசங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.நாச்சியம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
நன்செய் இடையார் மாரியம்மன் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு  ராஜகோபுர 7 கலசங்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் வந்தபோது எடுத்த படம்.
நன்செய் இடையார் மாரியம்மன் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ராஜகோபுர 7 கலசங்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் வந்தபோது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 அடி உயரம் கொண்ட கிழக்கு ராஜகோபுர திருக்குட நன்னீராட்டு விழா வரும் ஜூலை மாதம் 6 ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த ராஜகோபுரத்தில் 7 நிலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்காக 7 கோபுர கலசங்களை நேர்த்தி கடனாக வழங்கும் பணி நேற்று பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையார் மாரியம்மன் கோவி லில் நடைபெற்றது.

இந்த கோபுர கலசங்களை நன்செய் இடையாரை சேர்ந்த விவசாயிகள் பொன்னர், சங்கர் சகோதரர்கள் வழங்கியுள்ளனர்.

செம்பு உலோகத்தால் உருவாக்கப்பட்ட கலசங்கள் ஒவ்வொன்றும் சுமார் 4¾ அடி உயரம் கொண்டது. இந்த கலசங்கள் அனைத்திற்கும் நன்செய் இடையாறில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கலசங்கள் எடுத்துச் சொல்லும் வாகனத்திற்கு மலர்தூவி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட இந்த வாகனம் பக்தர்கள் தரிசனத்திற்காக பரமத்தி–வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, பரமத்தி, நாமக்கல், மோகனூர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர், தொட்டியம் மற்றும் முசிறி வழியாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றடைகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com