தருமபுரியில் இருந்து காவேரிப்பட்டினத்திற்கு ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் சிறையில் அடைப்பு

காவேரிப்பட்டணம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர், போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வாலிபர்களை படத்தில் காணலாம்.
கைது செய்யப்பட்ட வாலிபர்களை படத்தில் காணலாம்.
Published on

  தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ரகசிய தகவலின் பேரில் தருமபுரி காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் போலீசார் பாலக்கோட்டில் இருந்து காவேரிப்பட்டணம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது எலுமிச்சன அள்ளி பஸ் நிறுத்தம் அருகே அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இருவரும் காரிமங்கலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அணில் ரகுமான் (28), முக்குளத்தைச் சேர்ந்த கணேசன் (30) என்பதும் தெரியவந்தது. இருவரும் தருமபுரியில் இருந்து காவேரிப்பட்டி னத்திற்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசியையும் கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர்.

ரேஷன் அரிசி முட்டை கள் தருமபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com