தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு

சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. அடுத்ததாக போலீஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்படும் நிலையில் அத்தேர்விற்கான பயிற்சியும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது.
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறையில் காலியாக உள்ள 750 சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்) மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒர் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 1-7-2023 அன்று 20 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இத்தேர்விற்கு வருகிற 30-ந் தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வானது ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மேற்கண்ட சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக போலீஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்படும் நிலையில் அத்தேர்விற்கான பயிற்சியும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மேலும் ஏற்கனவே பயிற்சி பெற்ற மாணவர்கள் தயாராகும் வகையில் தனித்தேர்வு பயிற்சி வகுப்புகள், தனியே நாளை (திங்கள்கிழமை) முதல் நடத்தபட உள்ளது.

எனவே இப்பயிற்சி வகுப்பில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை பணிக்குத் தயாராகும் இளைஞர்கள் பயிற்சி வகுப்பின் பெயர், தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் 04362-237037 என்ற அலுவலக தொலைபேசி எண்ணி லும்தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com