இலவச பொது மருத்துவ முகாம்

பொது மருத்துவ பிரச்சினைகளுக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.40 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.
மருத்துவ முகாம் நடந்தது.
மருத்துவ முகாம் நடந்தது.
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் தீபம் மருத்துவமனை, சாந்தி நகர் நலசங்கம் இணைந்து மக்களை தேடி இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நகர் வளாகத்தில் நடைபெற்றது.

முகாமில் சாந்தி நகர் நலச்சங்க செயலாளர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார்.

தீபம் நிர்வாக இயக்குனர் நஜீபுதீன், நகர நல பொருளாளர் ஜாபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் பொது மருத்துவ பிரச்சினைகளுக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

பெண்களை பரிசோதிப்பதற்கென பெண் மருத்துவ குழுவினர் டாக்டர் மஞ்சு தலைமையில் கலந்துகொண்டனர்.

40 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.

மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவமனைக்கு உரியமுறையில் பரிந்துரைக்கப்பட்டது.

முகாமில் சாந்தி நகர் நல வாசிகள், தீபம் நிர்வாக அலுவலர் சரவணன், மருத்துவமனை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com