சுவாமிமலையில், இலவச மருத்துவ முகாம்

சர்க்கரை நோய்களுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மருத்துவ முகாம் நடந்தது.
மருத்துவ முகாம் நடந்தது.
Published on

சுவாமிமலை:

சுவாமிமலை எம்.எல்.ஏ. ஸ்கூல் கல்வி அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் சுவாமிமலையில் நடைபெற்றது.

முகாமில் மகளிர் சிறப்பு மருத்துவம், உடல் ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்டவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய்களுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோச னைகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் சுவாமிமலை எம்.எல்.ஏ. பள்ளி தாளாளர் எம்.எல்.ஏ. அப்துல் மாலிக் தலைமை தாங்கினார்.

இஸ்லாமிய நலச்சங்க தலைவர் ஜாஹிர் உசேன், செயலாளர் அப்துல் மாலிக், பொருளாளர் பக்கீர் முகம்மது, பேரூராட்சி உறுப்பினர் பக்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர். பாலமுருகன், தணிக்கை துறையின் துணை பொது மேலாளர் காஜா நஜ்முதீன், டாக்டர் குருநாதன் மற்றும் மதுபாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com