இலவச கண் பரிசோதனை முகாம்

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் ஆதரவில் செபத்தையாபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 100-க்கும் அதிகமானோர் முகாமில் பங்கேற்று கண்பரிசோதனை செய்து கொண்டனர்.
கண் பரிசோதனை முகாம் நடைபெற்ற காட்சி.
கண் பரிசோதனை முகாம் நடைபெற்ற காட்சி.
Published on

சாயர்புரம்:

சாயர்புரம் செபத்தை யாபுரம் லயன்ஸ் சங்கம் மற்றும் பேய்க்குளம் நிலச்சு வான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கம் இணைந்து டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் ஆதரவில் செபத்தையாபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

சாயர்புரம் செபத்தை யாபுரம் லயன்ஸ் சங்க தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர் டாக்டர் ஆலயமணி முகாமை தொடங்கி வைத்தார். விவசாய சங்க செயலர் ஜெய பொன்ராஜ் மற்றும் பொருளாளர் கார்த்திக் குணசேகரன் முன்னிலை வகித்தனர். நல்லா சிரியர் ஞானராஜ் மருத்துவ குழுவினரை வரவேற்றார்.

100-க்கும் அதிகமானோர் முகாமில் பங்கேற்று கண்பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் கண் மருத்துவ சிகிச்சை தேவையுற்ற 10 பேர் மாலை தூத்துக்குடி டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டு கண் சிகிச்சை செய்யப்பட்டு மருந்துகள் மற்றும் கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட் டன. விவசாய சங்க தலைவர் குணசேகரன் மற்றும் செபத் தையாபுரம் ஊர் நலத்த லைவர் லயன் அமிர்தராஜ் ஆகியோர் இணைந்து முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்த னர்.

X

Maalai Malar
www.maalaimalar.com