வாசுதேவநல்லூர் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
மாணவி  ஒருவருக்கு சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., சைக்கிள் வழங்கிய போது எடுத்த படம். உடன் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் மற்றும் பலர் உள்ளனர்.
மாணவி ஒருவருக்கு சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., சைக்கிள் வழங்கிய போது எடுத்த படம். உடன் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் மற்றும் பலர் உள்ளனர்.
Published on

சிவகிரி:

வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், வாசு பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பூமாரி, கிளை செயலாளர் ஸ்டாலின், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com