மருந்தாளுநர் பணிகளுக்கான தேர்வுக்கு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (MRB), 889 மருந்தாளுநர் பணிக் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக வருகிற 21-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
மருந்தாளுநர் பணிகளுக்கான தேர்வுக்கு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி
Published on

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (MRB), 889 மருந்தாளுநர் பணிக் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக வருகிற 21-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இப்பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த பயிற்றுநர்கள் மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டும் நடத்தப்பட உள்ளன. மேலும் பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன் தொடர்ச்சியாக மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த மருந்தாளுநர் பணி களுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com