திண்டுக்கல் அருகே தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

தென்னையில் ரூக்கோஸ் என்ற வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் முறைபற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த செயல் விளக்க நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் வட்டாரம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரமோகன் தென்னையில் ரூக்கோஸ் என்ற வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் முறையினை விவசாயிகளுக்கு எடுத்து கூறி அதனை செயல் விளக்கமாக செய்து காண்பிக்க அறிவுறுத்தினார்.

அதன்படி ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறையினை கொத்தப்புள்ளி, காமாட்சிபுரம், முருநெல்லிக்கோட்டை, கரிசல்பட்டி, குட்டத்துப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய பகுதி விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது .

இந்த செயல் விளக்க நிகழ்வில் உதவி வேளாண்மை அலுவலர்கள் பால்ராஜ், முத்துச்சாமி, சந்திரகலா, வெள்ளை சாமி, ராஜி மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு ,அருண்குமார் ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com