ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், உடன்குடியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை வழங்குகிறார்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை காலை 11 மணிக்கு திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்களை வழங்குகிறார்.நிகழ்ச்சியில் அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.
ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், உடன்குடியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை வழங்குகிறார்
Published on

உடன்குடி:

தமிழக மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு ஒட்டப்பிடாரம் ஒன்றியம் தருவை குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி யிலும், காலை 11 மணிக்கு திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பகல் 11.30 மணிக்கு திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மாலை 3 மணிக்கு உடன்குடி கிறிஸ்தியா நகரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மாலை 4 மணிக்கு வெள்ளாளன்விளை பிஷப் அசரியா மேல்நிலைப் பள்ளியிலும், மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச சைக்கிள்களை வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

இத்தகவல் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com