பொன்னேரி அருகே 4 வழிச்சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு

புதுவாயல்-பழவேற்காடு இடையே உள்ள 4 கிலோமீட்டர் தூரம் 4 வழி சாலையாக விரிவாக்க திட்டப்பணி நடைபெற்று வருகிறது. 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 4 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம் செய்தனர்.
பொன்னேரி அருகே 4 வழிச்சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு
Published on

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம், பெரிய காவனம் பகுதியில் புதுவாயல்-பழவேற்காடு இடையே உள்ள 4 கிலோமீட்டர் தூரம் 4 வழி சாலையாக விரிவாக்க திட்டப்பணி நடைபெற்று வருகிறது.

இந்த சாலையில் பெரிய காவனம் ரெயில்வே கேட் முதல் சின்னக்காவனம் வரை சாலையின் இருபுறமும் 100-க்கு மேற்பட்ட வீடுகள் பழமைவாய்ந்த 5 கோவில்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்வகுமார், நில எடுப்பு தனி தாசில்தார் ரமேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 4 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com