வெளிநாட்டு என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் மாயம்

கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தனது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார்.
வெளிநாட்டு என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் மாயம்
Published on

கோவை,

நேபாள நாட்டை சேர்ந்தவர் பிரேந்திர கர்ணா (வயது 22). இவர் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று கல்லூரி விடுதியில் இருந்த பிரேந்திர கர்ணா ெதன்னம்பா ளையத்துக்கு செல்போன் சர்வீஸ் செய்ய செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் விடுதிக்கு திரும்பி வரவில்லை. இது குறித்து விடுதி வார்டன் சுப்பிரமணியன் மாயமான நேபாள நாட்டு மாணவர் பிரேந்திர கர்ணாவை கண்டு பிடித்து தரும்படி சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வெளிநாட்டு மாணவரை தேடி வருகிறார்கள்.

ஆழியாறை சேர்ந்த 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி அடிக்கடி யாருடனோ அதிக நேரம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த மாணவி வீட்டை விட்டு மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தை சேர்ந்த 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியின் தந்தை விபத்தில் படுகாயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக மாணவி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின் தாய் சூலூர் போலீசில் மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com