தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் - நங்கைமொழி பஞ்சாயத்தில் அசத்தல்

நங்கைமொழி பஞ்சாயத்துக்குட்பட்ட அடைக்கலாபுரத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.ஊர் பிரமுகர் செல்லத்துரை நாடார் ரிப்பன் வெட்டி ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்ட போது எடுத்த படம்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்ட போது எடுத்த படம்
Published on

திருச்செந்தூர்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி பஞ்சாயத்துக்குட்பட்ட அடைக்கலாபுரத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் விஜயராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் பொன்செல்வி, யூனியன் கவுன்சிலர் செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர் பிரமுகர் செல்லத்துரை நாடார் ரிப்பன் வெட்டி ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கண்காணிப்பு காமிரா இயக்கத்தை மெஞ்ஞானபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பொன்பாய், மெர்சி, ஊர் பிரமுகர் சுரேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com