ரூ.20 லட்சத்திற்கு காங்கயம் இன காளைகள் விற்பனை

மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 103 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.சந்தையில் அதிகபட்சமாக ரூ.74 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர் :

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே, நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 103 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.

இதில் 56 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.74 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com