கோத்தகிரி காந்தி மைதானத்தில் கால்பந்து போட்டி

படுகர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியில் கால்பந்து ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி காந்தி மைதானத்தில் கால்பந்து போட்டி
Published on

அரவேணு,

கோத்தகிரி காந்தி மைதானத்தில் பொரங்காடு படுகர் நல சங்க சார்பில் படுகர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியில் சுண்டட்டி அணியும், உல்லாடா அணியும் விளையாடியது.

இதில் உல்லாடா அணி 1 கோல் அடித்தது. அதனைத் தொடர்ந்து சுண்டட்டி அணி 5 கோல் அடித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து அன்ணிகொரை அணியும், அரக்கம்பை அணியும் விளையாடியது. இதில் அன்ணிகொரை அணி 3 கோல் அடித்து வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இளித்தொரை அணியும், கடைகம்பட்டி அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் யாரும் கோல் அடிக்காததால் டைப் பிரேக்கர் முறையில் இளித்தொரை அணி வெற்றி பெற்றது.

முன்னதாக பொரங்காடு படுகர் நல சங்க நிர்வாகிகள் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தனர். போட்டியில் கால்பந்து ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com