சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இதற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர் லதா விளக்க உரையாற்றினார்.
சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Published on

தஞ்சாவூர்:

அரசு பள்ளி மாணவ -மாணவிகளுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் லதா விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க வட்ட கிளை செயலாளர் அஜய்ராஜ் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com