காலை சிற்றுண்டி வழங்கும் பணியை தங்களுக்கு வழங்க கோரி சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.தமிழக அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காலை சிற்றுண்டி வழங்கும் பணியை தங்களுக்கு வழங்க கோரி சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

பெரியபாளையம்:

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணியினை சத்துணவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் இத்திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சத்துணவு பணியாளர்கள் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.

பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தியும், தமிழக அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், மாவட்டத் தலைவர் சிவா, ஒன்றிய செயலாளர் தினேஷ், ஒன்றிய பொருளாளர் காந்திமதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com