போடியில் தரமற்ற உணவு தயாரித்த கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம்

போடியில் தரமற்ற உணவு தயாரித்த கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
போடியின் நகர் பகுதியில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
போடியின் நகர் பகுதியில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
Published on

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை கூட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சரண்யா (போடி), மணிமாறன் (கம்பம்), மதன் (உத்தமபாளையம்), சுரேஷ்கண்ணன் (சின்னமனூர்), சத்தீஸ்வரன் (தேனி மற்றும் பெரியகுளம்) ஆகியோர் ஒருங்கிணைந்து போடி பழைய பஸ்நிலையம், வள்ளுவர் சிலை, கட்டபொம்மன்சிலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள், டீ கடைகள், காய்கறி மார்க்கெட், இறைச்சி கடைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்கள் கைபற்றப் பட்டது. மேலும் இறைச்சிக் கடைகளில் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறதா? உணவு தயாரிக்கும் இடங்களில் தரமான பொருட் கள் பயன்படுத்தப்படுகிறதா? என சோதனை செய்தனர்.

தரமற்ற முறையில் உணவு தயாரித்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகள் சோதனையில் விதி மீறிய 7 கடைகளுக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com