திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைவு

திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை நீண்ட நாட்களுக்கு பிறகு குறைந்துள்ளது
திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகள், பொதுமக்கள்
திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகள், பொதுமக்கள்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் பூமார்க்கெட் அமைந்துள்ளது. செம்பட்டி, சித்தையன்கோட்டை, கொடைரோடு, சின்னாளபட்டி, ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான ஏக்கர் மலர் சாகுபடி நடைபெற்று வருகிறது. இப்பகுதி விவசாயிகள் திண்டுக்கல் பூமார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர்.

இங்கிருந்து ஓசூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தைப்பூசத்தை தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வந்ததால் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது தேவை குறைந்த நிலையில் பூக்கள் வரத்தும் சற்று அதிகரித்தும் காணப்பட்டது.

இதனால் திண்டுக்கல் பூமார்க்கெட்டில் பூக்கள் விலை ஓரளவு குறைந்துள்ளது. 1 கிலோ மல்லிகை ரூ.1500, முல்லை பூ ரூ.1200, கனகாம்பரம் ரூ.400, ஜாதிப்பூ ரூ.700, செவ்வந்தி மற்றும் சம்பங்கி ரூ.80, அரளி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.50, செண்டுமல்லி ரூ.30, ரோஸ் ரூ.40 என விற்பனையானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com