மீன்வளத்துறை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை

மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மீன் பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மீன்வளத்துறை சார்பில் மீன்பிடி துறைமுகத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் வானிலை மாறுபாடு காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மீனவர்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் எச்சரிக்கை தகவல் அளித்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 265 விசை படகுகள் மற்றும் நாட்டு படகுகள் இன்று மீன் பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com