கிணற்றில் விழுந்த நாய்க்குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு படையினர்

விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்று தவறி கிணற்றில் விழுந்து விட்டது. தீயணைப்பு படையினருக்கு அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கிணற்றில் விழுந்த நாய்க்குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு படையினர்
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள வெட்டுப்பட்டான் குட்டை என்ற இடத்தில் சுமார் 80 அடி ஆழமுள்ள விவசாய கிணறு உள்ளது. நேற்று மாலை இதன் அருகே விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்று தவறி கிணற்றில் விழுந்து விட்டது. இதுகுறித்து பல்லடம் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்பு படையினர், கயிறு கட்டி கிணற்றில் இறங்கி அந்த நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டு உரிமையாளர் வசம் ஒப்படைத்தனர். நாய்க்குட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு படையினருக்கு அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com