வீரவநல்லூரில் பந்தல் குடோனில் தீ விபத்து; ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

வீரவநல்லூர் பங்களா கடை பஜார் தெருவை சேர்ந்தவர் பாபநாசம் (வயது 75). இவர் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார்.இவருக்கு சொந்தமான பந்தல் குடோன் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
வீரவநல்லூரில் பந்தல் குடோனில் தீ விபத்து; ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
Published on

நெல்லை:

வீரவநல்லூர் பங்களா கடை பஜார் தெருவை சேர்ந்தவர் பாபநாசம் (வயது 75). இவர் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார்.

ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

இவருக்கு சொந்தமான பந்தல் குடோன் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அறிந்த வீரவநல்லூர் போலீசார் சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அந்த குடோனில் இருந்த சவுக்கு கம்புகள், ஓைல கீற்றுகள் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமாகின. இதனால் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியது.

விசாரணை

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீ விபத்து ஏற்பட்ட குடோனில் சுமார் 300 சவுக்கை கம்புகள் மற்றும் தென்னை ஓலை கீற்றுகள் இருந்துள்ளன. குடோனை சுற்றிலும் வீடுகள் உள்ளன.

இதனால் அதில் ஏதேனும் ஒரு வீட்டில் இருந்து நெருப்பு பொறி பறந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் அல்லது குடோனில் தகர செட் போடப்பட்டுள்ளதால் வெயிலின் தாக்கத்தால் தீ உண்டாகியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com