தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பலியான வியாபாரி குடும்பத்துக்கு நிதியுதவி - எர்ணாவூர் நாராயணன் வழங்கினார்

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அண்ணாசிலை அருகே கீரை வியாபாரம் செய்து வந்த ஜெயகணேசன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.இந்நிலையில் தூத்துக்குடி வந்த சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், உயிரிழந்த ஜெய கணேசனின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி நிதி உதவி அளித்தார்.
உயிரிழந்த ஜெய கணேசனின் குடும்பத்தினருக்கு எர்ணாவூர் நாராயணன் நிதி உதவி அளித்த காட்சி.
உயிரிழந்த ஜெய கணேசனின் குடும்பத்தினருக்கு எர்ணாவூர் நாராயணன் நிதி உதவி அளித்த காட்சி.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அண்ணாசிலை அருகே கீரை வியாபாரம் செய்து வந்த ஜெயகணேசன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.இந்நிலையில் தூத்துக்குடி வந்த சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவரும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன், உயிரிழந்த ஜெய கணேசனின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது மனைவி மற்றும் குழந்தை களுக்கு ஆறுதல் கூறி நிதி உதவி அளித்தார்.

அப்போது சமத்துவ மக்கள் கழகம் மாநில பொரு ளாளர் வக்கீல் கண்ணன், மாவட்ட செய லாளர் மாலைசூடி அற்புத ராஜ், நாடார் பேரவை தூத்து க்குடி வடக்கு மாவட்ட தலைவர் பரம சிவன், தெற்கு மாவட்ட தலை வர் அருண் சுரேஷ் குமார், மாவட்ட அவைத்தலைவர் கண்டி வேல், பொருளாளர் பழனி வேல், துணை செயலாளர் அருள்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், பிரதிநிதிகள் பெரியசாமி, முருகேசன், முத்துக்குமார், மாநகர செயலாளர் உதய சூரியன், வர்த்தக அணி செய லாளர் சிவசு. முத்துக்குமார், தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலாஜி உட்பட பலர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com