நிலக்கோட்டையில் வரதட்சணை புகாரில் 9 பேர் மீது வழக்கு

நிலக்கோட்டையில் வரதட்சணை தொடர்பான புகாரில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி ரோஜா காலனியை சேர்ந்தவர் ரத்தினவேல் மகள் நித்யா(24). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பிரபுராஜன்(28) என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது வழங்கிய நகை போதவில்லை எனக்கூறி மேலும் நகை வாங்கி வரச்சொல்லி நித்யாவை கணவர் குடும்பத்தினர் துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நித்யா புகார் அளித்தார். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் பிரபுராஜ் மற்றும் உறவினர்கள் ஷில்பா, அற்புதராஜ், மயில் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

நிலக்கோட்டை அடுத்துள்ள எஸ்.மேட்டுப்பட்டியை சேர்ந்த சிவராஜா (31) என்பவருக்கும் ரேகா(25) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்துவேறுபாடு காரணமாக ரேகா தனது கணவரைவிட்டு பிரிந்து தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது தனக்கு திருமணத்தின்போது போட்ட நகை, பொருட்களையும் எடுத்துச்சென்றுவிட்டார்.

இந்நிலையில் தனது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார். இதுகுறித்து சிவராஜாவும் புகார் அளிக்கவே 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com