குப்பைத்தொட்டியில் கிடந்த பெண் சிசு மீட்பு

திண்டுக்கல் அருகே குப்பைத்தொட்டியில் கிடந்த பெண் சிசுவை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.
குப்பையில் கிடந்த பெண் சிசு.
குப்பையில் கிடந்த பெண் சிசு.
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள மார்க்கம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நேற்று இரவு பஸ்சுக்காக பொதுமக்கள் காத்திருந்தனர்.

இன்று முழு ஊரடங்கு என்பதாலும் 10 மணிக்கு மேல் பஸ்கள் இயங்காது என்பதாலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அப்போது அங்குள்ள ஒரு குப்பை தொட்டியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனை கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து குப்பை தொட்டியில் சென்று பார்த்தனர்.

ஒரு கட்டைப் பைக்குள் துணியில் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் பெண் சிசு அழுது கொண்டிருந்ததை பார்த்து திடுக்கிட்டனர். கடும் குளிர் நிலவிய நிலையில் ஈக்கள் மொய்த்த நிலையில் அந்த குழந்தையின் தொப்புள் கொடிகூட வெட்டப்படவில்லை. இதனால் அந்த குழந்தை பிறந்து 2 மணி நேரம் மட்டுமே இருக்கும் என தெரிய வந்தது. இது குறித்து இடையகோட்டை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அந்த சிசுவை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தை என்பதால் குப்பையில் வீசி சென்றார்களா? அல்லது தவறான முறையில் பிறந்ததால் குழந்தை குப்பையில் வீசிப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நேற்று எத்தனை பேருக்கு பிரசவம் நடந்தது, அவர்கள் அனைவரும் குழந்தையுடன் வீட்டில் உள்ளார்களா? என்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com