பட்டதாரி பெண் தற்கொலை

வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
பட்டதாரி பெண் தற்கொலை
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் காரப்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகள் பூமிகா (வயது 22 ). இவர் கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்பு பயிற்சிக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் பூமிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து என்ன காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com