நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்100 நாள் வேலை திட்ட நிதி குறைப்பை கண்டித்து முற்றுகை நடைபெற்றது.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் 100 நாள் வேலை திட்ட நிதி குறைப்பை கண்டித்தும், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பிள்ளையார்நத்தம் 100 நாட்கள் பயனாளி க்கு சம்பளத்தை பாதியாக குறைத்ததை கண்டித்தும் முற்றுகை போராட்டம் சங்க ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் அருள்செல்வன், ஒன்றிய தலைவர் கல்யாணசுந்தரம், ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் வெள்ளைச்சாமி, ஜெயராமன், காசிமாயன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com