விவசாயி மாயம்

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
விவசாயி மாயம்
Published on

 கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள காவேரி கவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் திருமால் (வயது 34). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மாடு மேய்த்துக் கொண்டு விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தம்பி சின்னசாமி கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன திருமாலை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com