உரத்தட்டுப்பாட்டால் கொடைக்கானல் விவசாயிகள் தவிப்பு

கொடைக்கானலில் உரம் கிடைக்காததால் பட்டாணி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் அடுத்துள்ள மன்னவனூர், பூண்டி, கிளாவரை உள்ளிட்ட கிராமங்களில் மலைப்பூண்டு விவசாயம் அதிக அளவில செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக பட்டாணி, உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறி பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் பட்டாணி விதைப்பு பணியை தொடங்கிய விவசாயிகள் சிலர் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளனர். அறுவடை காலத்திற்கு முன்பு பயிர்களுக்கு போடவேண்டிய உரம் கிடைக்கவில்லை. உரநிறுவனங்கள் மூலம் விநியோகஸ்ரிடம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து விவசாயிகள் வாங்கிச் செல்வது வழக்கம்.

கொடைக்கானல் பகுதி விவசாயிகள் திண்டுக்கல் மற்றும் வத்தலக்குண்டு பகுதிக்கு சென்று உரங்களை வாங்கி வருவது வழக்கம். தற்போது அங்கு உரங்கள் முற்றிலும் இல்லாததால் அவர்கள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக் கையில், கொடைக் கானல் மலைக்கிராம விவசாயிகள் ஆதார் அட்டை மூலமே உரங்களை விற்று வருகின்றனர்.

தற்போது பட்டாணி பயிருக்கு உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் வெளி மாவட்டத்திலும் சென்று உரம் வாங்க முடியாது. எனவே கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் அலுவலகங்கள் மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள உரத்தட் டுப்பாட்டால் பட்டாணி விளைச்சல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இதுபோன்ற நிலை ஏற்படுவதால் இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com