சிதம்பரம் அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலைபோலீசார் விசாரணை

பாலமுருகனுக்கு அடிக்கடி கழுத்தில் வலி ஏற்பட்டுள்ளது.நிலத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தார்,
சிதம்பரம் அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலைபோலீசார் விசாரணை
Published on

கடலூர்:

சிதம்பரம் அடுத்த வீரசோ ழகன் பகுதியை சேர்ந்த வர் பாலமுருகன் (வயது 50). விவசாயி. இவருக்கு கடந்த சில தினங்க ளுக்கு முன்பாக கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை நடை பெற்றது. இதையடுத்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த பாலமுருகனுக்கு அடிக்கடி கழுத்தில் வலி ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென கழுத்துப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதற்கு மாத்திரை உட்கொண்டும் வலி குறையாமல் துடித்துள்ளார். வலி பொருக்க முடியாத பால முருகன், நிலத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

அவரது குடும்பத்தார், பாலமுருகனை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்துபோனார். இது தொடர்பான புகாரின் பேரில் சிதம்பரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com