விவசாயியை தாக்கி ரூ.20 ஆயிரம் பறிப்பு

மதுரை அருகே விவசாயியை தாக்கி ரூ.20 ஆயிரம் பறிக்கப்பட்டது. பணம் பறித்த 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விவசாயியை தாக்கி ரூ.20 ஆயிரம் பறிப்பு
Published on

மதுரை

மதுரை வாகைகுளம், கணக்கன் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42), விவசாயி. இந்த நிலையில் பாலமுருகன் இரவு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது அவரை ஒரு வாகனம் பின் தொடர்ந்து வந்தது. அதில் 3 பேர் இருந்தனர்.

காண்டை ரைஸ் மில் அருகே பாலமுருகன் சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பாலமுருகன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனை தொடர்ந்து பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 3 பேரும் இரும்பு கம்பியால் தாக்கி, அவர் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக் சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பாலமுருகனை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சிந்துபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாயியை தாக்கி பணம் பறித்து சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com