கடையம் அருகே மின்விசிறி தீ பிடித்து வாலிபர் படுகாயம்

மகேந்திரன் கறி வெட்டும் தொழில் செய்து வருகிறார்இரவு வழக்கம் போல் டேபிள் மின்விசிறி அருகில் மகேந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார்.
கடையம் அருகே மின்விசிறி தீ பிடித்து  வாலிபர் படுகாயம்
Published on

கடையம்:

கடையம் அருகே உள்ள கேளையாபிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 35). கறி வெட்டும் தொழில் செய்துவரும் இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் டேபிள் மின்விசிறி அருகில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாரத விதமாக மின்விசிறி திடீரென தீப்பிடித்தது. மின்விசிறியின் ஒயருக்கு அடியில் படுத்திருந்த மகேந்திரன் மீது மின்சாரம் தாக்கி தீ பிடித்துள்ளது. இதில் மகேந்திரன் போர்த்தியிருந்த போர்வை முழுவதும் தீப்பிடித்ததால் படுகாயம் ஏற்பட்டது.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மகேந்திரனை மீட்டு கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தென்காசி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com