குடும்ப தகராறு: கிச்சிப்பாளையத்தில் பெண் மாயம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிள்ளைகளை பார்க்க வேண்டி வேதாம்பாள் வ.உ.சி. நகரில் உள்ள வீட்டுக்கு வந்தார்.குடும்பத்தினருக்கும், வேதாம்பாளுக்கும் இடைேய பிரச்சிைன ஏற்பட்டுள்ளது.
குடும்ப தகராறு: கிச்சிப்பாளையத்தில் பெண் மாயம்
Published on

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் பச்சப்பட்டி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி வேதாம்பாள் (வயது 59).

இந்த தம்ப திக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் பெரியசாமி, தனது மனைவியுடன் திருச்சியில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிள்ளைகளை பார்க்க வேண்டி வேதாம்பாள் வ.உ.சி. நகரில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது குடும்பத்தி னருக்கும், வேதாம்பாளு க்கும் இடைேய பிரச்சிைன ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வேதாம்பாள் கடந்த 8-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். இதுவரையிலும் அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அக்கம், பக்கத்தில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து கிச்சிப் பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வேதாம்பாளை தேடி வருகின்றனர்.மாயமான அன்று சிமெண்ட் கலர் புடவை அணிந்திருந்தார். எனவே அவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி கிச்சிப்பாளையம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com