கொடைக்கானல் மலை கிராமங்களில் போலி டாக்டர்கள்

கொடைக்கானல் மலை கிராமங்களில் போலி டாக்டர்கள் நடமாட்டத்தை கோரிக்கை விடப்பட்டுள்ளது
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் மணலூர் ஊராட்சியில் பெரும்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. மலை வாழ் மக்களின் நலனிற்காக தொடங்கப்பட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வருவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

இதற்கு காரணம், பெரும்பாறையில் உள்ள தனியார் மருந்தகம் தனியார் மருத்துவமனை போல் செயல்பட்டு வருகிறது. பெரும்பாறை மலைப்பகுதியில் புதூர், குத்துக்காடு, எம்.ஜி.ஆர். நகர், கொங்கப்பட்டி, உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இப்பகுதியில் மருந்தகம் நடத்தும் சிலர் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. டாக்டர்கள் பரிந்துரையின்றி மாத்திரை வழங்கி, ஊசி செலுத்துதல் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதால் பலர் உடல் உபாதையால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மேலும் இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டடு வருகிறது. மக்களின் அறியாமையை பயன்படுத்தி சிகிச்சை அளிப் பதாக புகார் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக  ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com