கோவில் சிலைகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி

காலை கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்கள் நடத்தப்பட்டு குதிரை, பசு கண் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில் சிலைகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
கோவில் சிலைகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
Published on

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலை சரவணா தியேட்டர் எதிரில் உள்ள முனியப்பன், கருப்பண்ண சுவாமி கோவிலில் குதிரை, பசு கண் திறப்பு விழா நடைபெற்றது. காலை கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்கள் நடத்தப்பட்டு குதிரை, பசு கண் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

யாகசாலை பூஜைகளை சுவாமிநாத சிவாச்சாரியார், சத்யோஜாத வேத சங்கர சிவாச்சாரியார் மற்றும் குழுவினர்கள் நடத்தினர். சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com