கண் தானம் விழிப்புணர்வு பேரணி

பல்வேறு இடங்களின் வழியாக சென்று ராசாமி ராசுதாரர் மருத்துவ மனையில் பேரணி முடிவ டைந்தது.இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், டாக்டர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விழிப்புணர்வு பேரணி நடந்தது.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ராசா மிராசுதாரர் மருத்துவமனை கண் பிரிவு மற்றும் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் கண் தானம் செய்வோம் விழிப்புணர்வு பேரணி தஞ்சை ரெயிலடியில் நடைபெற்றது.

இந்த பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடிய சைத்து தொடங்கி வைத்து பேசினார்.

இதில் குந்தவை நாச்சியார் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண் தானம் செய்வோம் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

பல்வேறு இடங்களின் வழியாக சென்று ராசாமி ராசுதாரர் மருத்துவ மனையில் பேரணி முடிவ டைந்தது.

இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், டாக்டர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com