கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியின் 2023-24 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வருகிற 6-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பு பவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.200 பயிற்சி நிலையத்தில் நேரில் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்ட ப்படிப்பு படித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு, கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரின் தொலைபேசி எண்களுக்கோ 94435 87759, 94860 45666 அல்லது முதல்வர், பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் அருகில், முத்துப்பேட்டை ரோடு, நாடிமுத்து நகர்-அஞ்சல், பட்டுக்கோட்டை- 614602 என்ற முகவரியில் நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com