காந்திகிராம பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.டெக் மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அட்மிசன் நடந்து வருகிறது.மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.டெக் மற்றும் முதுகலை படிப்புகளுக்கு கடந்த 25-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டிப்ளமோ படிப்புகளுக்கு 15.07.2022 வரையும், பி.டெக், பி.எட் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு 05.07.2022 வரையும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என காந்திகிராம பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்து உள்ளது. முழு விவரங்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com