செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

இந்திய அஞ்சல் துறை தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சார்பாக நடைபெற்றது. பள்ளி தாளாளர் நோபில் ராஜ் மாணவர்களுக்கு திட்டத்தில் சேர்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி சிறப்புரை ஆற்றினார்.
திட்டம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்ட காட்சி.
திட்டம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்ட காட்சி.
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்திய அஞ்சல் துறை தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சார்பாக செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட துணை அஞ்சல் துறை அதிகாரி டென்னிஸ் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் பற்றி கூறி மாணவர்களை திட்டத்தில் சேர்ந்து பயன் அடைய வழிமுறைகளை கூறினார்.

பள்ளி தாளாளர் நோபில் ராஜ் மாணவர்களுக்கு அத்திட்டத்தில் சேர்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி சிறப்புரை ஆற்றினார். தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் ஆசிரியர் லிங்க துரை, சாந்தி, உமா, பிரிட்டோ, ராஜேஸ்வரி, பிரிஜித், சுவினா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சங்கர நாராயணன் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com